கவிக் காவிரியும் கலைக் காவிரியும்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் வாலி
பதிப்பகம் :வாலி பதிப்பகம்
Publisher :Vaali Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :191
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788192987958
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
கவிஞர் வாலி 50 வருடங்களாக தனது கவிதை வரிகளால் தமிழ் 'மக்கள் எனதில் நீங்காத இடம் பெற்றவர்.
கவிஞர் வாலியும் நானும் ஒரே சமகாலத்தில் சினிமா உலகில் பாடல் எழுத சந்தாப்பம் பெற்றோம். நான்! டைரக்டர் கோபாலகிருஷ்ணனின் முதல் படமான 'சாரதாவில் மணமகளே மருமகளே வா வா பாடல் மூலம் பாடலாசிரியரானேன். அதன்பிறகு சில காரணங்களால் நான் கதை வசனம் எழுதுவதில் தனி கவளம் செலுத்தி வேறு பாதைக்குத் திரும்பிவிட்டேன். ஆனால் ஆரம்பம் முதல் கடைசிவரை பாடலாசிரியராகவே. கவிஞராகவே தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து புகழைச் சுமந்து தனது பெயரை சினிமாவின் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் செதுக்கிவிட்டுச் சென்றுள்ளார் வாலி.
"கலங்கரை விளக்கம்' படத்திலும் 'கற்பகம' படத்திலும் பாடல் எழுத முதலில் எனக்குத்தான் சந்தாப்பம் கிடைத்தது, நான் அதை ஏற்கவில்லை. அந்தப் படங்களில் வாலி எழுதியபிறகுதான் மாபெரும் புகழும் தொடர்ந்து திரு. எம்.ஜி.ஆர். படங்களுக்கு எழுதும் சந்தர்ப்பங் களும் அவருக்கு வந்தன. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அவர் தனது புலமையாலும் திறமையாலும் 50 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தார்.
அருமை தண்பர் வாலி அவர்கள் மறைந்தாலும் அவருடைய ‘ஆன்ம கீதங்கள்' என்றும் நிலைத்திருக்கும்.
நாங்கள் தட்பாகப் பழகிய நாட்களை எண்ணி மன மகிழ்வுடன்..
- பஞ்சு அருணாசலம்