book

தீராதது காதல் தீர்வானது...

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்த்தி ரவி
பதிப்பகம் :அறிவு நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :412
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா? தெரியவில்லை. ஆனால், ஒரு திருமணத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல வெறும் உடல் கூடல் அல்லாமல், இரு மனங்கள் சங்கமிக்க வேண்டும்.

காதல், புரிந்துணர்வு - இவை இரண்டும் திருமண வாழ்க்கைக்கு மிக அவசியம். இக்கதையின் நாயகி டானியா. நாயகனின் பெயரை நான் இப்போது சொல்லப் போவதில்லை. நீங்களே ஒன்றிரண்டு அத்தியாயங்களில் தெரிந்துகொண்டு விடுவீர்கள்.

டானியா எப்படி? அவள் தன் வாழ்க்கைப் பாதையில் சந்தித்தது என்ன? கதையின் நாயகன் எப்படிப்பட்டவன்? அவன் என்ன செய்யவிருக்கிறான்?

இவர்கள் இருவரைத் தவிர இன்னும் சில கதாப்பாத்திரங்களும் உண்டு. அவர்களும் உங்கள் மனம் கவருவார்கள் என நம்புகிறேன்.

“தீராதது காதல் தீர்வானது”
அப்படித் தீராதது என்ன? யாருக்கு? கதையில் அறிவீர்கள்.

வர்ணனை, ரசனை, காதல், சகோதரம், நட்பு, குடும்பம்... மீண்டும் ஓர் அமெரிக்கக் கதைப் பயணம். வாசித்து மகிழுங்கள்.