book

இன்றைய இந்தியா

₹700
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன், ரஜனி பாமிதத்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :912
பதிப்பு :3
Published on :2017
ISBN :9788123414546
Add to Cart

ஆங்கில மூலநூலின் ஆசிரியர் ரஜனி பாமிதத். இவர் உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய விடுதலைக்காகப் பலவழிகளில் பங்களித்தவர். இந்திய நாடு விடுதலை பெறுவதற்குமுன் இந்நூல் எழுதப்பட்டது.

இந்த நூலுக்கு பல்வகை சிறப்புகள் இருப்பினும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை இரண்டு.ஒன்று இந்த நூல் அக்காலத்தில் ஒவ்வொரு போராளி கையிலும் திகழ்ந்தது.இந்தியா அல்லாத வேறுபல நாடுகளில் பணியாற்றி வந்த விடுதலை இயக்கங்களுக்கும் இது ஓரளவு வழிகாட்டி நூலாகவும் இருந்தது.மற்றொன்று இந்திய வரலாற்றை மக்கள் வரலாறாகக் காண வேண்டும் என்னும் கோட்பாட்டுக்கு அடிக்கல் நாட்டியது.நாடு விடுதலை பெற்ற 60 ஆண்டுகளில் பொருளாதர,சமூக ஆய்வு நூல்கள் எண்ணிறந்தவை வெளிவந்துள்ளன.அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக,வழிகாட்டியாக விளங்குவது இந்நூல்.