வேட்டைப்
பறவையொன்றாகத் தன்னை வரித்துக்கொள்ளும் ஒருத்தன், தற்செயலை விரட்டிப்
பிடிக்கத் துணிகிற பயணமே இந்நாவல். எல்லாவற்றையும் எழுதும் கரமாகத் தன்னை
உணரும் அவன், இறுதியில் எதை அடைந்தான்? மலையுச்சியில் விடாமல் சுற்றும்
தர்மசக்கரத்தை சுழல விடுவது யார்? அச்சக்கரத்தை விரட்டிப் பிடிக்க முயலும்
இளைஞன் ஒருத்தனின் பார்வையில் விரியும் இந்நாவல் இதுவரை சொல்லப்படாத
களமொன்றைக் கட்டியெழுப்பியிருக்கிறது. வண்ணமயமான சித்திரங்களின் வழியாக
அதிர்ஷ்டமென்பது குறித்து ஆழமான கேள்வி எழுப்புகிறது. சூதின் உச்சியைப்
பார்க்கப் புறப்பட்ட அவனது பயணம் எந்தக் கூட்டில் நிறைவடைந்தது? புதிய
சாளரத்தைத் திறந்து காட்டி இருக்கிறார் சரவணன் சந்திரன். லகுடானது தாழப்
பறக்கிறது அங்கே.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , லகுடு, சரவணன் சந்திரன், Saravanan Chandran, Novel, நாவல் , Saravanan Chandran Novel, சரவணன் சந்திரன் நாவல், கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Saravanan Chandran books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.