நாளை நமதே
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜான்சன் ரெக்ஸ் தனபால்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388104265
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartஇன்றைய இளைய சமுதாயம் கேள்விக்குறியாகிப் போனதற்குக் காரணம் யார்? இது விடைகாண முடியாத கேள்விதான். ஆண், பெண் பேதம், பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, சாதிவெறி அனைத்திலும் இளைஞர்களின் எதிர்காலம் புகுத்தப்பட்டு சிதைந்து கொண்டிருக்கிறது. `இளைஞர்களை மீட்க வேண்டும்... அவர்களின் போக்கை செம்மைப்படுத்த வேண்டும்... அடிப்படை யிலிருந்து மாற்றம் செய்யவேண்டியது நம் கடமை. நல்வாழ்வின் மூலாதாரம் என்ன? ஒரு மனிதன் உருவான இடம் கரு. கருவில் உருவானது முதல் அன்பு, பாசம் தந்து பாலூட்டிச் சீராட்டி வளர்த்த தாய் தந்தையரின் பாசத்தை நினைவூட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்' என்ற ஆதங்கத்தோடு அறிவுரை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். அம்மா, அப்பா, பாட்டி என ரத்த சொந்தங்களின் உணர்வு சார்ந்த ஒழுக்கநெறிகளை மறக்கச்செய்வது எது? இளைஞர்களின் நேரத்தைப் பிடுங்குவது எது? யோசி... மாத்தியோசி... உன்னை மீட்டுக் கொண்டுவா. நற்குணங்களையும் நற்செயல்களையும் போதிக்கும் சான்றோர்களே, இளையோர்களை மீட்கும் ஆன்றோர்கள்.இளைஞர்கள் நினைத்தால் எதையும் மாற்ற முடியும், புதிய சமுதாயத்தை அமைக்க முடியும் என்பதை பல மேற்கோள்களுடன் கூறி இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டுகிறார் நூலாசிரியர். நிச்சயம் இந்நூலைப் படிக்கும் இளைஞர்களின் எண்ணங்களில் எழுச்சி பிறக்கும்; ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்கிற நம்பிக்கை உதிக்கும். இனி வழியெல்லாம் வெற்றிகாண நூலுக்குள் செல்லுங்கள்!