book

பாங்கர் விநாயகர் ராவ்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :காவேரி புத்தக நிலையம்
Publisher :Kauvery Puthaga Nilayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

முதல் தொண்டர் : நாங்கள் யுவர் சங்கத் தொண்டர்கள். அடுத்த வாரம் சட்டசபையில் பூரண மதுவிலக்குப் பிரேரேபணை வரப்போகிறதல்லவா? அதைத் தாங்கள் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள வந்தோம்.

இரண்டாம் தொண்டர் : வேறொரு வேண்டுகோளும் இருக்கிறது. தயவு செய்து தாங்கள் தங்களுடைய தென்னை மரங்களைக் கள்ளுக்கு விடக்கூடாது.

முதல் தொண்டர் : சட்டசபையில் தாங்கள் நியமன அங்கத்தினர் என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் தங்களுடைய வாக்களிக்கும் சுதந்திரத்தை யாரும் மறுக்க முடியாது.

விநாயகராவ் : ஏழைகள் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரமப்படுவது குறித்துச் சந்தோஷம். நானும் என் கடமையைச் செய்வேனென்று நீங்கள் நம்பியிருக்கலாம்.

தொண்டர்கள் : நமஸ்காரம், போய் வருகிறோம். {போகிறார்கள்}

விநாயகராவ் : முன்னுக்கு வரக்கூடிய பிள்ளைகள் இப்படிக் கெட்டுப் போகிறார்கள்...ஓஹோ! மணி பத்தாகி விட்டது. {எழுந்து உள்ளே செல்கிறார்.}