மகா கணபதி
₹315+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. முத்துக்குமாரசுவாமி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :420
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388139984
Add to Cartகணபதியின் மூல மந்திரத்தை உருவாக்கியவர் கிரித்சமதா. அந்த மந்திரத்தைத் தொடங்கும் முன் கிரித்சமதாவின் நாமமும் உச்சரிக்கப்படுகிறது. தாயாரின் சாபத்தால் அசுர குணமுள்ள ஆண்குழந்தை அவருக்குப் பிறந்தது. கிரித்சமதாவின் தும்மலிலிருந்து ஜனனம் எடுத்த உயிர் என்று அதை புராணங்கள் தெரிவிக்கின்றன.அக்குழந்தை, “உங்கள் உடலிலிருந்து உதித்ததால் நான் உங்கள் மகனாகிறேன். வளர்ந்து உரிய பருவம் அடைந்ததும் மூவுலகையும் வெல்ல என்னை ஆசிர்வதியுங்கள்!’ என்று தந்தையை வணங்கி நிற்க, அதனால் கிரித்சமதா சற்று தடுமாறுகிறார். பின்னர் “கணானம் த்வாம் கணபதி ஹவாமஹே’ என்ற மந்திரத்தை மகனுக்கு உபதேசித்து, அவனது மனதை பக்தி மார்க்கத்தில் செலுத்த முயற்சிக்கிறார்.அந்த மந்திரத்தை ஜபித்த கிரித்சமதாவோ கஜானனனை நினைந்து பல்லாயிரம் வருடங்கள் கடுந்தவம் புரிந்தான். அவனது தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவனுக்குக் காட்சி தந்தார்.“அனைத்து உலகும் எனது வசம் ஆகவேண்டும். மனித, யட்ச, தேவ, கந்தர்வர் அனைவரும் என் ஆணைக்குக் கட்டுப்படவேண்டும். எனது இச்சைகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும்!’ என, கிரித்சமதாவின் மகன் விநாயகரிடம் வேண்டினான்.“வெள்ளி, தங்கம், இரும்பு உலோகங்களை மூலமாகக் கொண்ட மூன்று நகரங்கள் உனக்குக் கிடைக்கும் அவை உன்னிடம் இருக்கும்வரை உன்னை எவரும் வெல்ல முடியாது. உனது விருப்பங்கள் யாவும் நிறைவேறும். சிவபெருமான் மட்டுமே உன்னை வெல்ல வல்லமை படைத்தவர். திரிபுராசுரன் என்ற பெயருடன் நீ இனி அழைக்கப்படுவாய்!’ என்று விநாயகர் திரிபுராசுரனுக்கு வரமளித்து மறைந்தார்.