தே: ஒரு இலையின் வரலாறு
₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராய் மாக்ஸம், சிறில் அலெக்ஸ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194865384
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2021
Add to Cartஉலகம் விரும்பி அருந்தும் ஒரு பானத்தின் கதை என்று சொல்லலாம் அல்லது, இப்படியும் விரித்துச் சொல்லலாம். தேநீர் மீது பிரிட்டன் கொண்டிருந்த வேட்கை எவ்வாறு மெல்ல மெல்ல வளர்ந்து அதனை ஒரு பேரரசாக மாற்றியது என்பதையும் அந்த மாற்றம் உலகம் முழுக்க எத்தகைய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதையும் ஆராயும் முக்கியமான நூல் இது. சீனாவின் தேயிலையை வாங்குவதற்கு இந்தியாவின் ஓப்பியத்தை கிழக்கிந்திய கம்பெனி அளிக்கத் தொடங்கியபோது அதிரத் தொடங்கிய உலகம் இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தேயிலைத் தோட்டத்தில் தொடங்கும் பயணம் நம்மை சீனா, இந்தியா, சிலோன், ஆப்பிரிக்கா என்று உலகம் முழுக்க அழைத்துச் செல்கிறது. ஒரு கோப்பை தேநீருக்குள் சூழ்ச்சி, சுரண்டல், கயமை, லாபவெறி, ஆதிக்கம் அனைத்தும் அடங்கியிருக்கும் என்று என்றாவது நினைத்துப் பார்த்திருப்போமா? ராய் மாக்ஸிமின் A Brief History of Tea நூலின் அதிகாரபூர்வமான தமிழாக்கம் இது. சிறில் அலெக்ஸின் அழகியமொழிபெயர்ப்பு புத்தகத்தின் சுவையை மேலும் கூட்டுகிறது.