நாராயணபுரம்
₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜாஜி ராஜகோபாலன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :416
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789389857559
Add to Cartகனடாவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாழும் ராஜாஜி ராஜகோபாலன் எழுபதுகளின்போது எழுத்துத் துறையில் காலடி பதித்தவர். இவரின் கவிதைகள், சிறுகதைகள், நாவல் என்பவை இவர் பிறந்து வளர்ந்த ஈழத்து வடபுலத்தின் சமூக, பண்பாட்டுக் கோலங்களையும்
அனுபவங்களையும் ஏக்கங்களையும் பேசுகின்ற எழுத்துப் பிரதிகளாகக் கவனம் பெறுகின்றன. இதனால் இன்று இவர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த
எழுத்தாளர்களில் தனித்துவமாக அறியப்படுகிறார்.
நாராயணபுரம் ராஜாஜியின் முதலாவது நாவலாகும். இதன் கதை இவர் வாழ்ந்த புலோலிக் கிராமத்தினதும் அதற்கு அண்மையிலுள்ள வல்லிபுர மாயவன்
கோயிலினதும் மண்ணுக்கும் மக்களுக்கும் மிக நெருக்கமானதெனலாம். அங்கு நிலவும் வாழ்வியல் அம்சங்களையும் இயல்புகளையும் கலாச்சாரக் கூறுகளையும் வழக்காற்று மொழியையும் நுட்பமாகக் கையாளும் நாவலாகும் இது.ஈழத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் பெருமளவிலான போரிலக்கியங்கள் வெளியாகும் இக்காலத்தில் நாராயணபுரம் பரந்துபட்ட
விமர்சன அங்கீகாரம் பெறுமென்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது வாசகர் மனம்.