கிருஷ்ண லீலா
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். கல்யாணி மல்லி
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
அந்த கருப்பு பயல் துரு துரு வென்று இருப்பவன்.ஒரு இடத்தில் நிற்காமல் அலைபவன். அவனுக்கு என்று ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அத்தனை பேரும் சாமான்யமானவர்கள் அல்ல. கண் பார்த்ததை கை எடுக்கும்.இவர்கள் அனைவருக்கும் லீடர் அந்த கருப்பு பயல். ஐந்திலிருந்து எட்டுக்குள் தாண்டாத வயசு அனைவருக்கும். சாதுவாக இருப்பவனையும் தயார் செய்து விடுவான் அந்த கருப்பு பயல். ஒரு வீடு பாக்கியில்லாமல் அந்த தெரு அதற்கடுத்த தெரு எதிர் தெரு அதன் பின்னால், என்று அந்த சிறிய கிராமத்தின் அனைத்துதெருவுக்கும் செல்வார்கள். எதற்கு? வீட்டில் கொஞ்சம் அசந்து இருக்கும் சமயம் பார்த்து அந்தந்த வீட்டில் சேமித்து வைத்திருக்கும் வெண்ணையை அபேஸ் செய்ய. ஒரு தடவை இரண்டு தடவை வேண்டுமானால் கோட்டை விட்டு ஏமாறலாம். விழித்து கொண்ட தாய்மார்கள் இந்த பயல்கள் கைக்கு எட்டாமல் உயரே உத்தரத்தில் ஒரு கயிற்றில் உரி கட்டி அதற்குள் வெண்ணை, பால் சட்டிகளை வைத்து விடுவார்கள். இந்த கும்பலுக்கு இதனால் பெரும் ஏமாற்றம். என்னடா செய்யலாம் என்று யோசித்தார்கள். இருக்கவே இருக்கிறானே தலைவன். அவன் யோசனை கொடுத்தான்.