புதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788177351750
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Out of StockAdd to Alert List
இந்நூலின் தொகுப்பாசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் தம் முன்னுரையில் தமிழ் சிறுகதைகளின் வரலாற்றை எடுத்துக் கூறியுள்ளார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை அறிமுகம் செய்திருக்கிறார். எனினும் ஒரு சில கதைகள் பற்றி குறிப்பிடலாம். பணக்கார்ர்களிடம் கொள்ளையடிக்கும் சங்கிலத் தேவன் ஒரு ஏழைப் பெண்மணியின் ஒரே மகனின் திருமணத்திற்கு பணம் அளித்து உதவுகிறான்; விதவைகள் அனுபவிக்கும் துயரங்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள் அவதூறுக்கு உட்படுவது, வறுமை காரணமாக தன் உடலை விற்கும் பெண்ணின் சோகம், வேலை பறி போவதால் ஏற்படும் நெருக்கடி நிலைகள், போலிச்சாமியார்கள், ஒரு இடச்சியை திருமணம் செய்து கொள்ளும் ஒரு பிராமணர் அவளை மேற்கத்திய நாகரீகத்திற்கு வழிகாட்டுவது - இவ்வாறு சமுதாயத்தின் நிகழ்வுகளை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளன சில சிறுகதைகள்.