book

ஷகிலா சுயரிதை

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஶ்ரீபதி பத்மநாபா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :224
பதிப்பு :1
ISBN :9789385104596
Add to Cart

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை ஹூமா குரோஷி.கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர்ஸ் என்று இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் வித்யாபாலன். இதற்காக தேசிய விருதும் வாங்கினார். தற்போது இன்னொரு கவர்ச்சி நடிகையான ஷகீலாவின் வாழ்க்கையும் திரைப்படமாக இருக்கிறது.விளம்பர படங்களில் நடித்து, பிரபல மாடல் என்ற அந்தஸ்தை பெற்று, சினிமாவில் நுழைந்து இந்தியில் வேகமாக முன்னேறி வருபவர், நடிகை ஹூமா குரோஷி. இவர்தான் ஷகிலாவின் சுய சரிதை படத்தில் நடிக்கப் போகிறாராம். மலையாள பட உலகில் 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் ஷகிலாவின் ஏகபோக கவர்ச்சி ராஜ்ஜியம்தான். கேரளத்து முதல் நிலை நாயகர்களான மம்முட்டியும் மோகன்லாலுமே போட்டி போட அஞ்சிய நடிகை இந்த ஷகிலா. இன்றைக்கு காமெடி, குணசித்திர நடிகையாகிவிட்டாலும் 90களில் ஷகிலா படத்திற்கு ரகசியமாக போனவர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். ஷகிலா எழுதிய சுயசரிதை புத்தகம் இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஷகிலா எழுதியுள்ள சுயசரிதையின் அடிப்படையில் சினிமா தயாக இருக்கிறது. பிரபல கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தயாராகிறது ஷகிலாவின் சுயசரிதை. இதில் ஷகிலாவாக நடிக்க நடிகை தேடி வந்தார்கள் தற்போது பிரபல இந்தி நடிகை ஹூமா குரோஷியை முடிவு செய்திருக்கிறார்கள்.'கன்ஸ் ஆப் வஷேபூர்' படத்தில் அறிமுகமான ஹூமா அதன் பிறகு உபன்ஷந்த் கங்கா, டி.டே, பதல்பூர், ஹேவே, உள்பல பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.