book

பண்டைக்கால தமிழரும் ஆரியரும்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மறைமலையடிகள்
பதிப்பகம் :தமிழ்மண் பதிப்பகம்
Publisher :Tamilmann Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Add to Cart

"தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில், 15-7-1876ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை , தாயார் சின்னம்மையார், பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் வேதாசலம். தனித் தமிழில் கொண்ட பற்றுக் காரணமாக, பின்னர் தனது பெயரை "மறைமலையடிகள் என்று மாற்றிக் கொண்டார். அடிகளாரின் பள்ளிக் கல்வி ஒன்பதாம் வகுப்புடன் முடிவடைந்தது. எனினும் தனது 21-ம் வயதுக்குள், பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இதற்கிடையே அடிகளாருக்கு அவருடைய 17-வது வயதில் திருமணம் நடந்தது. மணமகள் பெயர் சவுந்தரவல்லி, திருமணத்தின்போது அவருக்கு வயது 13. 1893 மார்ச் மாதத்தில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழாசிரியராக அடிகளார் பதவி ஏற்றார், 5 ஆண்டுகள் அப்பணியில் இருந்தார். அப்போது அவரிடம் மாணவர்களாக இருந்த பலர், பிற்காலத்தில் தமிழறிஞர்களாகவும், தலைவர்களாகவும். அரசியல்வாதிகளாகவும் புகழ் பெற்றார்கள்.