book

திருமுருகாற்றுப்படை

₹72+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்துவான் தி. பட்டுச்சாமி ஓதுவார்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :124
பதிப்பு :1
ISBN :9788183796453
Out of Stock
Add to Alert List

திருமுருகாற்றுப்படை என்பது. முருகக்கடவுளின் திருவருளைப் பெற்ற புலவன் ஒருவன். அக்கடவுளின் திருவருளைப் பெற விரும்பும் புலவன் மற்றொரு புலவனை அக்கடவுளிடம் ஆற்றுப் படுத்தும் (வழிகாட்டி அனுப்பும்) மேன்மை வாய்ந்த நூல் முருகனிடத்து ஆற்றுப்படுத்துவது முருகாற்றுப்படை. முருகாற்றுப்படை. (முருகு ஆற்றுப்படை. ஆறு+படை =ஆற்றுப்படை. ஆறு-வழி. திரு-அடை மொழி.) இந்நூல் புலவன் ஒருவனை முருகக்கடவுளிடம் ஆற்றுப் படுத்தியதனால், ‘புலவர் ஆற்றுப்படை’ எனவும் பெயர் பெறும் என்பர். பல தலங்களுள் பழமுதிர் இந்நூல், முருகக்கடவுள் எழுந்தருளிய மிகச்சிறப்பாய்த் திகழும் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், சோலை என்னும் ஆறு தலங்களில் அவர் எழுந்தருளிய சிறப்பு முதலியவற்றை ஆறு பகுதியாய் (ஆறு படைவீடு ஆக)ப் பிரித்துக் கூறியிருந்தாலும் எல்லாம் சேர்ந்து ஒரே இணைக்குறள் ஆசிரியப்பாவாக 317 அடிகளைக் கொண்ட ஒரு பாட்டாய்த் திகழ்கின்றது; இந்நூலில் உள்ள தெளிவுரைப்பகுதியினை நன்கு பார்வையிட்டுத் தத்தம் அரிய பல கருத்துக்களையும் சிறந்த விளக்கங்களையும் கூறப்பட்டுள்ளது.