நவீனக் கவிதைகளும் என் வாசிப்புகளும்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. பஞ்சாங்கம்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2019
Add to Cartவிமர்சனம் என்றவுடன் பிரதியை மதிப்பிடுவது, எடைபோடுவது, தீர்ப்பு எழுதுவது என்பனவெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. அத்தகைய அதிகாரச் செயல்பாட்டிற்கு மெய்யான அழகியல் அனுபவத்தில் இடமில்லை. வாசகர், பிரதிக்கடலுக்குள் பயணம் செய்து மகிழ்ந்த அனுபவத்தைச் சுட்டிக் காட்டுவதையே விமர்சனமாக வளர்த்தெடுக்கிறார். இங்கே எறும்பும் யானையும் சமபலம் பெறுகின்றன. காட்டனுபவம் வேண்டுமென்றால் இரண்டும்தான் தேவை. சமீபத்தில் மறைந்த உம்பர்ட்டோ கோ சொல்வது போல, "பிரதியோடான உறவு என்பது ஓர் இன்பச் சுற்றுலா போன்றது. எழுத்தாளர் வார்த்தைகளை எடுத்து வருகிறார். வாசகர் அவற்றிற்கான அர்த்தங்களைக் கொண்டு வருகிறார். சுற்றுலாச் சமையல், மூக்கைத் துளைக்கும் வாசனை கமகமக்கப் பிரமாதமாகி விடுகிறது"