book

மிச்சக் கதைகள்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2021
Out of Stock
Add to Alert List

ஒரு நூறு ஆண்டுகளை நெருங்கி விட்டார் கிரா. காலத்தின் அற்புதம் அவர். இந்தக் கதைசொல்லியின் ‘மிச்சக் கதைகள்’ வைரம் பாய்ந்தவை. இதில் காலமும் கலையும் கைகோர்த்துள்ளன. தத்துவமும் வாழ்க்கையும் பிணைந்துள்ளன. கிரா எப்போதுமே தரிசனங்களைக் காட்டுபவர்.

கிராவின் கதைகள் அவரது அகவய அனுபவங்கள். தமிழின் உச்சம் அது. கரிசல் காட்டைக் கலங்கரை விளக்கம் ஆக்கியவர். மாயமான் எனும் தோணியில் கிளம்பியவர் இப்போது அண்டரண்ட பட்சி எனும் ராட்சத கப்பலின் மாலுமி ஆகிவிட்டார். அண்டரண்ட பட்சி அண்மைப் படைப்பு. கையெழுத்துப் பிரதியே பிரளயம் ஆகிவிட்டது. அது பேசாப் பொருளை பேசியது. யாரும் நெருங்க முடியாத உயரம் அது; உச்சம் அது.

கிரா ஐம்பதுகளின் இறுதியில் எழுவானம் கண்டவர். மிச்சக் கதைகளில் உச்சிவானம் காண்கிறார். இதில் அவரது உன்னதங்கள் மின்னலாய் மின்னுகின்றன. காணாத கண்திறப்புகள் கண்களில் விரிகின்றன. தமிழ்ச் சொல்மரபின் வைரம் இப்போது வைடூரியம் ஆகியுள்ளது.