book

இந்துமத இணைப்பு விளக்கம்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. ஆறுமுக நாவலர்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

நமது இந்து மதத்தின் இணையிலாத் தத்துவங்களை அடங்கிய வேதாகமங்கள் வடமொழியில் இருப்பதாலும், சாத்திரங்கள் பல செய்யுள் வடிவில் எல்லோரும் இனிது அறிந்துகொள்ள முடியாத முறையில் அமைந்திருப்பதாலும் அத்தத்துவங்களை யாவரும் நன்குணருமாது எளிய இனிய தமிழில் ஓர் இந்துமத நூல் வெளியிட வேண்டுவது இன்றியமையாததாயிற்று. இந்து மதத்தில் உள்ள அநேக கிளை மதங்களின் அடிப்படைக் கருத்து ஒன்றேயாயினும், அவை வேறுபட்டன போலப் பிரிந்து ஒன்றோடொன்று மாறுபட்டு ஒற்றுமை இல்லாதிருப்பது இந்து மதத்தின் பொதுவளர்ச்சிக்கு இடையூற்றினை விளைவித்து வருகின்றது. ஆதலின், அக்கிளைகள் அனைத்தையும் இணைத்துப் பொதுக் கொள்கைகளை மேற்கொண்டு இந்து மதத்தை உருப்படுத்தி வளர்க்க வேண்டுவது அவசியமாகும். அது கருதியே இந்துமத இணைப்பு விளக்கம் எனும் இந்நூல் வெளியிடப்படுகின்றது. உலகில் உள்ள ஒவ்வொரு மதங்களுக்கு ஒவ்வொரு மத நூல் இருப்பது போல, இந்து மதத்துக்கும் ஒரு தனி நூல் அமைய வேண்டுவதும். பாதத்தின் சாராம்சங்களை எளிதில் தற்கால விஞ்ஞான முறையில் விளக்க வேண்டுவதும், மத தத்துவங்களில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை அகற்றி. மதத்தில் தெளிவு பெற்ற ஒரு உறுதி நிலையை உண்டு பண்ணவேண்டுவதும் காலநிலைக்கு இன்றியமையாத கடப்பாடாயிற்று.