ஒருபாலுறவு
Orupaaluravu
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Vishnupuram Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :76
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789392379154
Add to Cartதமிழ்ச்சூழலிலேயே ஒருபாலுறவு ஈர்ப்பு கொண்டவர்கள் பலர் இருப்பதும், இங்குள்ள சமூகநோக்கு அவர்களை ஒரு தலைமறைவுச் சமூகமாக ஆக்கியிருப்பதும் இணைய ஊடகம் வந்த பின்னரே தெரியவந்தது. ஜெயமோகனின் இணையதளத்தில் வந்த கடிதங்களில் இருந்து தொகுக்கப்பட்ட இத விவாதங்களில் பல தளங்களில் இருந்து குரல்கள் ஒலிக்கின்றன.
”என்னுடைய பார்வை எப்போதுமே தெளிவானது. நான் பாலியல், ஒழுக்கவியல் கொண்டு மனிதர்களை அளவிடுவதில்லை. சமூகப்பங்களிப்பைக் கொண்டே அளவிடுகிறேன். ஒருவர் தன் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வது அப்பங்களிப்பின் வழியாகவே. அதை இயற்றுவதற்குரிய வாழ்க்கையை அவர் அமைத்துக்கொண்டார் என்றால் அதுவே உகந்த வாழ்க்கை” என்று ஜெயமோகன் இவ்வுரையாடலைத் தொகுக்கும்போது குறிப்பிடுகிறார்.