book

அசடன் (கனடா இலக்கியத்தோட்ட விருது, நல்லி திசை எட்டும் விருது, ஜி.யூ. போப் விருது)

The Idiot

₹1250
எழுத்தாளர் :எம்.ஏ. சுசீலா
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :1183
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788188641147
குறிச்சொற்கள் :கனடா இலக்கியத்தோட்ட விருது, நல்லி திசை எட்டும் விருது, ஜி.யூ. போப் விருது
Add to Cart

தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் அனைவரோடும் அன்பு செலுத்தி வாழ்வதற்கு ஏன் அனுமதிக்கப்பட மறுக்கிறான் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்வி இன்றும் பதிலற்றே இருக்கிறது. அசடன் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச்செய்யும் அற்புதப்படைப்பு. இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல். நான்குமுறை இந்த நாவல் படமாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா அவரது பார்வையில் இதைப் படமாக்கியிருக்கிறார். இந்தியாவின் மிக முக்கிய இயக்குனரான மணிக்கௌல் இதை இந்தியில் தொலைக்காட்சிக்கான குறும்படமாக உருவாக்கியிருக்கிறார். ஆங்கிலத்தில் பனிரெண்டு வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் இந்தநாவலுக்கு உள்ளன. - எஸ். ராமகிருஷ்ணன்