கதீட்ரல் (இறவாக் குறிப்புகளின் சரீரம்)
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தூயன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789355230157
Add to Cartபத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இக்கதை அறிவைச் சேகரித்துத் தொகுப்பதன் பின்னிருக்கும் மறைமுகமான அதிகாரம், அரசியல் ஆகியவற்றையும் கோடிட்டுக் காட்டுகிறது. தனித்துவமான கற்பனைகளைத் திருட்டிற்குப் பலி கொடுத்த ஒருத்தி, பிறரது சிந்தனைகளைத் திருடும் மேற்கத்திய மருத்துவனைத் தடுக்க, தன் வரலாற்றை இழந்த ஒருவனோடு, தனது பால்ய கனவுகளைத் தவறவிட்ட கன்னியாஸ்திரியையும் கூட்டுசேர்த்துக்கொண்டு, பூரணமாகக் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்திற்குள், முழுவதுமாய் எழுதி முடிக்கப்படாத நூலைத் தேடி அலைகிறாள்.