அறிவியல் திருவள்ளுவம்
Ariviyal Thiruvalluvam
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோவை. இளஞ்சேரன்
பதிப்பகம் :வாலறிவன் பதிப்பகம்
Publisher :Vaalarivan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2021
Add to Cartதிருக்குறளைப் படித்து அதன் பல்வேறு பட்ட பரிமாணங்களை ஆராய்ந்து கடத்துதல் தமிழ் அறிஞர்களின் ஒரு மரபாக தொடர்ந்து வந்திருக்கிறது.. திருக்குறளின் சாயல் அதன் சமகால நீதி நூல்களிலும் திருமூலம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களிலும் பிற்காலப் படைப்புகளிலும் காணக்கிடைப்பதைப் பார்க்கிறோம்.
தனது படைப்புகளில் திருக்குறளை மேற்கோள் காட்டிச் சொல்வதும் பல காலம் தொடர்ந்திருக்கிறது..
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பாரதியும் வள்ளுவன் புகழை தமிழ்நாட்டுக்கு ஏற்றிப் பாடினார்.
‘வாசிப்போம் நேசிப்போம்’ குழுமத்தின் வார்ப்பான ’வாலறிவன்’ பதிப்பகத்தார் இந்த நவீன இலக்கிய வாசகர் பரப்பினில் வள்ளுவத்தை துணிச்சலுடன் தமது இரண்டாவது முயற்சியாக தேர்வு செய்து தந்துள்ளார்கள்.
1994 இல் இந்நூலின் முதல் பதிப்பு வெளியாகி உள்ளது.. நூலைப் படித்த போது அப்போதைய வாசகர்களுக்கே இது ஆழமான வாசிப்பைக் கோரியிருக்கும் என்பதை 80 களில் வாசிக்க வந்த என்போன்றோரால் உணர முடிகிறது. தற்போதைய வேகமான வாசிப்புலகிற்கு பழைய செழுந்தமிழ் நடையுடன் கூடிய இந்த நூலை வெளியிட்டிருக்கிற வாலறிவனை வியக்கத் தோன்றுகிறது..
நூலாசிரியர் கோவை இளஞ்சேரன் தமிழ் ஆர்வலர்..குறள் நெறியாளர்..தமிழ்பாட நூல் ஆய்வாளர்.. பல ஆய்வுப் படைப்புகளைத் தந்தவர் என்ற அவரது பன்முகங்களை நூலில் சொல்லப் பட்டிருக்கும் அவர் பற்றிய குறிப்புரையும் அவரது படைப்புகளின் பட்டியலும் தெரிவிக்கின்றன.
நூலின் தலைப்பைப் பார்த்ததும் ‘ பழைய இலக்கியங்கள் நவீன கண்டுபிடிப்புகளை அன்றே சொல்லியுள்ளன’ என்றெல்லாம் பழந்தமிழ் நூல்களில் இருந்து வெட்டி எடுத்துச் சொல்கிறார்களே¸ (அவற்றில் மிகச் சில கூறுகளே உண்மையாக இருக்கும்) அவை போன்ற நூலோ என்று தோன்றியது..
நல்ல வேளையாக அவ்வாறில்லை.. கோவை இளஞ்சேரன் திருக்குறளில் அறிவியல் கூறுகளைக் கண்டறிந்து வியக்கிறார்..அவரது பட்டியலில் வானியலும் பொருளியலும் மருத்துவமும் அறிவியல் கூறுகளாக முன்வைக்கப் பட்டு வள்ளுவத்தில் அவை அடையாளம் காட்டப் பட்டுள்ளன..
வானியல் என்றால் வானூர்தி தொழில் நுட்பமோ என்று அவசரப் பட வேண்டாம்.. வளிமண்டலத்திற்கும் பூமிக்குமான தொடர்பு பற்றியது.. அருளாளர் துன்பமுற்றது இல்லை என்பதற்கு சான்றுரைக்க வரும் வள்ளுவர் அதற்கு பூமியின் மேல் பரந்திருக்கும் காற்று மண்டலத்தின் போக்கால் வளம் பெற்றிருக்கும் இந்தப் பெரிய உலகத்தின் மக்களேதான் சாட்சி என்கிறார்
‘அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.’
(ஞாலம் – உலகம் கரி – சான்று).
‘வளி வழங்கும்’ என்ற சொற்றொடர் இங்கு வியக்கப் படுகிறது..
பொருளியல் கூற்றாக வள்ளுவத்தில் வைக்கப்பட்டிருக்கும் ‘இயற்கை வளம்¸ பொருள் உற்பத்தி¸ நிதிக் கையிருப்பு மற்றும் பகிர்தல் என்ற நவீனப் பொருளாதாரக் கோட்பாடுகள் நூலில் ஆய்வுக்கு எடுத்தாளப்பட்டுள்ளன.
மருத்துவத்திற்கு ‘மருந்து’ என்ற ஒரு அதிகாரம் மூலமாக¸ நோயறிதல்¸ நோயின் காரணமறிதல்¸ முதலில் அதை மட்டுப் படுத்தும் ஆரம்ப நிலை மருத்துவம்¸ அடுத்து நோயை முற்றாகத் தீர்க்கும் முறை காணல் மற்றும் உணவே மருந்தாகும் உணவுக் கட்டுப்பாடுகள் என்றெல்லாம் ஈராயிரம் ஆண்டு முன்பிருந்த மருத்துவ முறைகளின் கூறுகளை நவீன மருத்துவத்துடன் ஒப்பிட்டு வள்ளுவ அறிவியலை வியக்கிறார் கோவை.இளஞ்சேரன்.
அறிவியல் திருவள்ளுவம் என்ற தலைப்பை விளக்க¸ ஆரம்ப அத்தியாயங்களில, வள்ளுவம் சொல்லும் அறிவியல் (அறிவு + இயல்) வரம்புகளை¸ வரைமுறைகளை ஆசிரியர் அழகாகக் கட்டமைக்கிறார்.
நூலின் மொழிநடை எளிமையாயில்லை என்பதோடு¸ நூல் வள்ளுவத்தின் பால் ஆர்வம் கொண்டோருக்கு மட்டுமே ரசனை பயக்கும் என்று குறிக்க விரும்புகிறேன்.
வாசிப்புப் பெருவோட்டம் 2021