சுவப்னவாஸவதத்தம் (சமஸ்கிருத நாடக வரிசை)
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.வெ. சுகவனேச்வரன்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :92
பதிப்பு :2
Published on :2015
Add to Cartநமக்கு ரொம்ப பிடித்தவர்களை பிரிந்தால் எப்படியிருக்கும்.
பிரிந்த பிறகு அவர்கள் நம்மை நினைப்பார்களா? இல்லை மறந்துவிடுவார்களா? என்று சோதிக்கும்,தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும்.
நான் இந்த உலகில் இல்லாவிட்டால் இவன்/இவள் நம்மை நினைப்பானா/ளா என்ற குறுகுறுப்பு எல்லோருக்கும் இருக்கும்.
அதுபோன்ற எதிர்பார்ப்பையுடைய மனித உணர்வை பேசுகிறது சமஸ்கிருத நாடகமான “சுவப்னவாஸவதத்தம்”.கிபி முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நாடகத்தை எழுதியவர் “பாஸன்”.பாஸன் ,கவி காளிதாசர் வணங்கும் புலவரும் மூத்தோரும் ஆவார் .
அரசன் உதயணனுக்கு சிக்கல்.அவன் நாட்டின் பெரும்பகுதியை பகைநாட்டு அரசன் ஆக்கிரமித்துக் கொள்கிறான்.
உதயணன் சிறு பகுதியில் தன் அன்பு மனைவி ’வாசுவதத்தை’ யுடன் ஆட்சி செய்து வருகிறான்.
ஆனால் மந்திரி யவ்வனராஜனுக்கு இப்படி சிறிய பகுதியை ஆண்டு சிற்றரசனாய் உதயணன் இருப்பதில் உடன்பாடில்லை.என்ன வழி என்று யோசிக்கிறார்.பக்கத்து நாட்டு மன்னன் தர்சகன் உதவி செய்தால் உதயணனால் அவன் இழந்த பகுதியை மீட்க முடியும் என்று நம்புகிறார்.