book

அல்அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்லாஹ்வின் பேரழகுப் பெயர்கள் – சுருக்கமான விளக்கம்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷெய்க் அப்துற் றஸ்ஸாக், இப்னு அப்துல் முஹ்ஸின் அல்பத்ர்
பதிப்பகம் :குகைவாசிகள் பதிப்பகம்
Publisher :Kugaivaasigal Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

அல்அஸ்மா என்றால் பெயர்கள். அல்ஹுஸ்னா என்றால் பேரழகு. பெயர்களிலெல்லாம் பேரழகு வாய்ந்த பெயர்களையே இங்கு அல்அஸ்மாஉல் ஹுஸ்னா எனப்படுகிறது. இவை நம்மைப் படைத்தவனின் பெயர்கள் அல்லவா? பேரழகு இல்லாமலா இருக்கும்? அவனுடைய பண்புகளைவிடப் பேரழகு இருக்க முடியுமா? அவனுடைய பண்புகளுக்கு அவனே சூட்டிக்கொண்ட பெயர்கள் பேரழகு மிக்கவையே. அதனால் அவனுடைய பெயர்களுக்கும் பண்புகளுக்கும் இணையே இல்லை. ஆனால், அல்லாஹ்வின் பேரழகுப் பெயர்களைப் பொருள் அறியாமல் மனப்பாடம் செய்திருப்போர் நம்மில் உண்டு. இது நமக்கு எவ்வளவு இழப்பு! அல்லாஹ்வின் பண்புகளைத் தெரியாத இழப்பல்லவா? உண்மையில், அவனுடைய பெயர்கள் வெற்றுச் சொற்கள் அல்ல. அவனின் பண்புகளை வருணிக்கும் இறைநம்பிக்கையின் அடிப்படை ஆதாரங்கள்; பாடங்கள். அல்லாஹ் யார் என்கிற அறிவின் அரிச்சுவடிகள். இந்நூலில் ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்-பத்ர் ஒவ்வொரு பெயரின் ஆதாரங்களையும் நுட்பங்களையும் சுருக்கமாக விவரிக்கிறார்கள்.