book

இன்பமாய் வாழ்ந்திட இனிய வழிகள்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இமாம் அப்துற் றஹ்மான், நாசிர் அஸ்ஸஅதீ
பதிப்பகம் :குகைவாசிகள் பதிப்பகம்
Publisher :Kugaivaasigal Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :60
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

மன அழுத்தங்கள், கவலைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நிம்மதியைப் பெறுவதே ஒவ்வொரு மனிதனின் நோக்கமாக இருக்கின்றது. அதன் மூலம்தான் வாழ்க்கை சிறந்ததாக அமைகின்றது; மகிழ்ச்சியும் இன்பமும் பரிபூரணமடைகின்றது. இந்த நிம்மதியைப் பெற இஸ்லாமிய மார்க்கரீதியான காரணிகளும், இயற்கைக் காரணிகளும், நடைமுறை சார்ந்த காரணிகளும் இருக்கின்றன. நம்பிக்கையாளர்களிடமே இவை அனைத்தும் சேர்ந்து காணப்படுகின்றன. மற்றவர்களிடம் இவை ஒன்று சேர்ந்து காணப்படுவதில்லை. அவற்றில் சிலவற்றை அவர்கள் பெற்றாலும் மிகவும் அவசியமான, சிறந்த காரணிகளை இழந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் அடைய விரும்புகின்ற இந்த உயர்ந்த நோக்கத்தை அடையும் வழிமுறைகளை நான் இந்தச் சிறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். சிலர் இந்த நோக்கத்தை அடைந்து நிம்மதியாக வாழ்கிறார்கள். சிலர் இதனை அடையாமல் நிம்மதியற்று, துர்பாக்கியசாலிகளாக காலத்தைக் கழிக்கிறார்கள். சிலர் இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்வை வாழ்கிறார்கள். அல்லாஹ்தான் பாக்கியம் அளிப்பவன்; நன்மையான விசயங்களைச் செய்வதற்கும் தீமையான விசயங்களிலிருந்து தவிர்ந்துகொள்வதற்கும் உதவி அளிப்பவன். – இமாமவர்களின் வரிகள் சில.