book

கியூபாவின் விடுதலை

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகேஸ்வரி அண்ணாமலை
பதிப்பகம் :அடையாளம் பதிப்பகம்
Publisher :Adaiyalam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788177203134
Add to Cart

கியூபா அமெரிக்காவுக்குத் தெற்கில் உள்ள ஒரு குட்டித் தீவு. இந்தியாவுக்கு வழி தேடிய கொலம்பஸ் முதலில் கால்வைத்த தீவு. காலனி ஆதிக்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக உரக்க விடுதலைக் குரல் கொடுக்கும் நாடு. இதனால் உலகம் நன்கறிந்த நாடு. அனைவருக்கும் இலவசக் கல்வி, மருத்துவம், மனிதர்களின் நெடுநாள் வாழ்வு, குழந்தைகள் நோய்களுக்குப் பலியாகாமல் வளர்வது போன்ற சாதனைகளால் சமூக வளர்ச்சியில் அமெரிக்காவையும் மிஞ்சி நிற்கும் நாடு. . இந்த நாட்டை நாம் சமூக அரசியல் வரலாற்றுக் கண்ணுடன் பார்ப்பதற்கு, தான் நேரில் பார்த்த அனுபவத்தின் மூலமும் ஆராய்ச்சியின் மூலமும் நம்மை அழைத்துச் செல்கிறார் நாகேஸ்வரி அண்ணாமலை. கியூபாவின் வரலாற்றை அதன் தொடக்க காலம், அடிமைகளின் வரவு, காலனிய விடுதலைப் போர்கள், அமெரிக்கக் கைப்பாவை பதீட்சாவின் கொடுங்கோலாட்சி, அமெரிக்காவின் கொடூரச் செயல்கள் என்று வரிசையாக எளிய தமிழில் ஆதாரத்துடன் விவரிப்பது நமது பார்வையைக் கூர்மையாக்குகிறது. கியூபாவின் புரட்சி, புரட்சியின் நாயகனான ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆளுமை, அவர் அரசியலிலும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் செய்த அடிப்படை மாற்றங்கள், அவருடைய பொதுவுடைமை ஆட்சியின் இலட்சியம், சோவியத் யூனியனுடன் சிக்கலான உறவு, மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைப் போர்களில் உதவி, தொடரும் கியூபாவின் பிரச்சினைகள் என ஒவ்வொரு கண்ணியாக ஆசிரியர் தொடுத்துக் கட்டி நமது கியூபா பற்றிய தேடலுக்கான அறிவைச் சிரமமில்லாமல் தருகிறார். ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமைக்குப் பின்புலனாக இருக்கும் அவருடைய ஆளுமையின் புதிரையும் அவிழ்க்கிறார் ஆசிரியர். கொடுங்கோன்மையின் வீழ்ச்சி, சமத்துவப் புரட்சி, ஏகாதிபத்தியங்களின் இயலாமை, வளம் குறைந்த பொருளாதாரத்தில் சமூக வளர்ச்சிச் சாதனை ஆகியவை பற்றி அக்கறை உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது.