book

காலம் போற்றும் கவி கா.மு. ஷெரீப்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. திவான்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :316
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

பன்னூல் ஆசிரியர் பேரறிஞர் எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள் வழியில் தனது வாழ்வை எழுத்திற்காக அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் சகோதரர் செ. திவான் அவர்கள். பன்னூலாசிரியர்¸ வரலாற்று ஆய்வறிஞர்¸ நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தாமே சொந்தமாக வெளியிட்டு வருபவர். காலம் மறந்த கவிஞன் என்ற நிலையினை மாற்றி அவரது அரிய முயற்சியால் ‘காலம் போற்றும் கவி கா.மு.ஷெரீப்’ எனும் நூல் இப்போது வெளி வருகிறது. எனது மாமனார் எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள்¸ அண்ணன் கவி கா.மு.ஷெரீப் அவர்களோடு நெருங்கிய தொடர்புடையவர் என்பதனை இந்த நூலின் பல பக்கங்களிலும் நெடுகக் காணலாம். உமறுப்புலவரின் சீறாப்புராணப் பதிப்பு 1964-களிலேயே வெளிவர¸ ஏவி.எம். ஜாபர்தீன் அவர்களும்¸ எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்களும் எடுத்த முயற்சிகள் ஏராளம். 1982ஆம் ஆண்டின் துவக்கத்தில் எனக்கும்¸ எனது துணைவியார் பாத்திமாவிற்கும் நடந்த திருமணத்தின் போது சீறாப்புராண விளக்க உரை அச்சில் வரும் இனிப்பான செய்தியினை கவி கா.மு.ஷெரீப் அவர்கள் சொன்னது போன்ற பல விஷயங்கள் இந்த நூலில் உள்ளது. கவி கா.மு. ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு விழாவில் இந்த நூலை வெளியிடுவதில் எங்களது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இந்நூலாசிரியர் செ. திவான் அவர்களின் முயற்சி வெற்றி பெற¸ இது போன்ற பல நூல்களை அவர் எழுதி நாங்கள் வெளியிட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக! -எஸ்.எஸ். ஷாஜஹான்