இன்னொரு முறை (ஆர். சூடாமணி சிறுகதைகள்)
₹600
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :720
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788183456340
Out of StockAdd to Alert List
சூடாமணி 1954-ல் 'பரிசு விமர்சனம்' என்னும் முதல் கதையை எழுதினார். இது வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய நந்தவனம் என்னும் இதழில் வெளிவந்தது. 1954-லேயே 'நோன்பின் பலன்', 'அன்பு உள்ளம்' முதலிய கதைகளை எழுதினார். அவருடைய சிறுகதை 'காவேரி' 1957-ம் ஆண்டு கலைமகள் வெள்ளிவிழா பரிசு பெற்றது. 1959-ம் ஆண்டு மனதுக்கு இனியவள் என்னும் நாவல் வெளிவந்தது. இந்நாவலுக்கு சிறந்த நாவலுக்கான கலைமகள் ஸ்ரீநாராயணசாமி ஐயர் விருது வழங்கப்பட்டது. இந்நாவல் சூடாமணியின் தன்வரலாற்றின் சாயல் கொண்டது.
சூடாமணி கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், இந்தியா டுடே, புதிய பார்வை போன்ற இடைநிலை மற்றும் வணிக இதழ்களில் தொடர்ந்து எழுதினார். ஆங்கிலத்திலும் ’சூடாமணி ராகவன்' என்ற பெயரில் கதைகளை எழுதியுள்ளார். இவருடைய 'இரவுச்சுடர்' நாவல் யாமினி என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சூடாமணியின் பெரும்பான்மையான கதைகள் குடும்பம் சார்ந்தவை. கதைமாந்தரின் உளநிகழ்வுகளை வெவ்வேறு கோணத்தில் சொல்லமுயல்பவை. ஆனால் உளப்பகுப்புத்தன்மையோ சீண்டும்தன்மையோ அற்றவை. பெண்களின் உரிமை, விடுதலை ஆகியவற்றைப் பற்றிப் பேசினாலும் அவர் பெண்ணியக் கொள்கைகள் எதையும் முன்வைக்கவில்லை.