book

தொலைகடல்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா மகேஸ்வரி
பதிப்பகம் :தமிழினி
Publisher :Tamizhini Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788187641476
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள், கற்பனை கதைகள்
Out of Stock
Add to Alert List

கடவுளின் குழந்தை என்னிடம் அ' எழுதக் கற்றுக்கொண்டது. சில சமயம் அதைத் தலைகீழாக என்றும் எழுதியது. என்  சுண்டுவிரலை உள்ளங்கைக்குள் இறுகப் பற்றிக்கொண்டு தூங்கியது. காரட்டும் கீரையும் ஊட்டிவிடச் சொன்னது. முத்தங்களில் என்னை மூழ்கடித்தது. புதிய வார்த்தைகளையும் அர்த்தங்களையும் எனக்குப் பயிற்றுவித்தது. நான் வேலையாயிருந்தால் சமையலறையிலேயே சமர்த்தாக டம்ளர்களை பெரியதிற்குள் சிறியதாக அடுக்கி விளையாடியது. என்னோடு அழகானதலையணைக் குடில்கள் கட்டப்பழகியது. என்ன கொஞ்சுவாளோ, ஏது சொல்வாளோ,ஏன் ரோஸ் இவளிடம் இப்படி ஒட்டிக்குது போன்ற சந்தேங்களோ, சஞ்சலங்களோ எதுவுமின்றி தன் குழந்தை என்னோடு இழைவதை ஓடும் நதியைப் பார்ப்பதுபோலப் பார்க்க ஏஞ்சலினால் எப்படி முடிகிறது.