கலைவெளிப் பயணி சிற்பி தனபால்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ண பிரபு
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789355230492
Add to Cartநுண்கலைத் துறையில் சென்னைப் பாணியை உருவாக்கியவர்களில் ஒருவர் சிற்பி தனபால். படைப்பாற்றல் மிக்க சிற்பியாகவும் இணையற்ற ஆசிரியராகவும் கலைத் துறைக்குப் பெரும்பங்காற்றியவர்.
ஓவியம் பயின்றவர்; எனினும் தனபால் தனது கலை ஊடகமாக ஏற்றுக்கொண்டது சிற்பத்தைத்தான். திராவிடக் கலை மரபையும் மேற்கத்திய நவீனத்தின் கூறுகளையும் இணைத்து அவர் உருவாக்கிய சிற்ப மரபு முன்னோடித் தன்மை கொண்டது. அவர் வடித்த ஒளவையார், இயேசு, பெரியார் சிற்பங்கள் திராவிடக் கலை மரபுக்குப் புதிய திசைகாட்டிகளாக அமைந்தன. சிற்பி என்ற அளவில் அவரது படைப்புச் சாதனைகள் தனித்துவம் கொண்டவை, நிகரற்றவை.
சிற்பி தனபாலின் வாழ்வையும் கலைப்பணியையும் அவருடைய பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு இந்நூல் நினைவுகூர்கிறது.