மரங்கள் பேசும் மௌன மொழி
₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. ஜீவானந்தம், பீட்டர் வோல்பென்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :148
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789355231307
Add to Cartமரங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரியும்.
மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. ஒன்றுக்கொன்று உதவி செய்துகொள்கின்றன. இயற்கைச் சூழலை அனுசரித்து அவை தம்மைக் காத்துக்கொள்கின்றன.
அவை வளர்கின்றன. பரவுகின்றன. புலம்பெயர்கின்றன.
வனம் என்பவை மனிதர்கள் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாத மாபெரும் புதிர். இயற்கையின் மாபெரும் கொடையாகிய வனம் என்பது உயிராற்றலின் அற்புதமான பொக்கிஷம். மனிதர்கள் உருவாக்கும் செயற்கை வனங்கள் இயற்கை வனங்களுக்கு முன் கால் தூசுக்குச் சமமானவை.
மரங்களின் வாழ்வை அறிதல் என்பது ஒருவகையில் இயற்கையின் பேரதிசயத்தையும் அசாத்தியமான ஒழுங்கையும் அறிதல். மரங்களின் மொழியைப் புரிந்துகொண்டால் இயற்கையின் மொழியை, உயிரின் மொழியைப் புரிந்துகொள்ளலாம்.
முழுக்க முழுக்க மரங்களைப் பற்றியே பேசும் இந்த நூல் மரங்களைப் பற்றியது மட்டுமல்ல. மானுடம் தாண்டிய இவ்வுலகின் பெருவாழ்வைப் பற்றியது.