மனப்பூ
₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மேலாண்மை பொன்னுசாமி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :3
Add to Cartகாணும்- உணரும்- வாழ்க்கையை வார்த்தைகளில் பதிவு செய்வது மட்டுமா, சிறுகதையின் இயல்பு? அல்ல. வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் உள்ளும் புறமுமான முழுமையை, உண்னையோடு உணர்த்துகிற தொனியிலேயே வாழ்க்கைத் தீர்வுக்கான வெளிச்சத்தையும் வழவ்குவதுதான் சிறுகதைக் கலையின் இயல்பும். பணியும். இந்தப் பணி முழுமையாக நிகழ்ந்தேற வேண்டுமானால், சிறுகதையின் வடிவநேர்த்தி மிகமிக முக்கியமான தாகிவிடுகிறது. வடிவநேர்த்திதான் சிறுகதையின் உள்ளடக்க உயிர்ப்பையும் உணர்வுப் பாய்ச்சலையும் நிகழ்த்துகிறது; உயிர்ப்போடு இயங்கி வெற்றிகரமாக்குகிறது. வாசகரின் உள்ளத்தை எடுத்த எடுப்பில் அள்ளிக் கொண்டாடுவது மொழிநடை. வாசிக்கும் கணத்திலேயே படைப்பின் சாராம்சத்தையும், சமுதாயநோக்கையும் வாசகப் பண்பாட்டு உணர்வாக்குவது கதைக் கட்டுமானக் கச்சிதமும் வடிவநேர்த்தியும்தான்.