சென்னைக் கம்பன் கழகம் 1975இல் நிறுவப் பெற்றது. திரு. ஏவி. மெய்யப்பன்
அவர்கள் 12.8.1979 அன்று இயற்கை அடைந்த வரையில், கழகத்தின்
துணைத்தலைவர்களுள் ஒருவராக இருந்து வந்தார்கள்.திரைப்படத் துறையில் பெரும்
பெயர் பெற்றிருந்த அவர்கள், கம்பன் கழகத்தோடு தொடர்பு கொண்டதிலிருந்து,
கழகத்தின் வளர்ச்சியிலும், கம்பனுடைய கவிநயத்தைப் பருகுவதிலும், முழுமையான
ஈடுபாடு கொண்டிருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தாம் தலைவராக இருந்த ஏவி.எம்.
அறக்கட்டளையினுடைய ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் கம்பன் விழா
நிரந்தரமாக நடைபெறுவதற்கு வழி வகுத்ததோடு, கழகத்திற்கு அவ்வப்போது தேவையான
உதவிகள் அனைத்தையும் நிறைந்த உள்ளத்துடனும், மட்டற்ற மகிழ்ச்சியுடனும்
செய்து வந்தார்கள்.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கணினி யுகத்திற்குக் கம்பர், பேரா.இரா. மோகன், Pera.Era. Mohan, Ilakiyam, இலக்கியம் , Pera.Era. Mohan Ilakiyam, பேரா.இரா. மோகன் இலக்கியம், வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Pera.Era. Mohan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.