book

காரடையான் நோன்பு சாவித்திரி பாடம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாள்
பதிப்பகம் :Agasthiar Publications
Publisher :அகஸ்தியர் பதிப்பகம்
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :52
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

காரடையான் நோன்பு கடைப்பிடிக்கும் முறை: இந்த நோன்பில் மிக முக்கியமான விஷயம் சாவித்திரி பாடம். அதாவது சத்யவான் சாவித்ரி கதையினைப் படிப்பது, கேட்பது, சொல்வது அவசியம். பொதுவாக மூத்த சுமங்கலிகள் இதனைச் சொல்ல, மற்றவர்கள் சிரத்தையாகக் கேட்பார்கள். இந்தக் கதை, கர்ண பரம்பரையாக ஆதரிக்கப்பட்டு இன்றும் உயிரோடிருக்கும் பாட்டுக்களுள் ஒன்று. சாவித்திரி நோன்பு, கவுரி நோன்பு என்றெல்லாம் சொல்லப்படும் காரடையான் நோன்பினை மாசியும் - பங்குனியும் கூடும் வேளையில் செய்ய வேண்டும். (இந்த ஆண்டு 14.3.2018 இரவு 9.30 மணி முதல் 10.30 மணிவரை இந்த நோன்புக்கான நேரம் அமைகிறது). வட சாவித்திரி நோன்பென்ற பெயரில் இது நம் நாட்டின் வடபகுதிகளிலும் கூட அனுசரிக்கப்படுகிறது. அங்கெல்லாம் மரத்தைச் சுற்றி வந்து நூல் கட்டி வழிபடும் வித்தியாசமான வழக்கம் காணப்படுகிறது.