book

ஆகாச வீடுகள்

₹370+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாஸந்தி
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

இன்றைய கிராமத்துக்கு, குறிப்பாக அதன் அக்ரஹாரத்துக்கு, ஆன்மா இருக்கிறதா? இயற்கை அழகின் நடுவிலிருப்பவர்களுக்கு மனம் இருக்கிறதா? அன்பிருக்கிறதா? காருண்யம் இருக்கிறதா? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? கிராமத்து ஆண்களின் நிலை என்ன? பெண்களின் நிலை என்ன? குழந்தைகளின் நிலை என்ன? வாழ்க்கை அங்கே எப்படி இருக்கிறது? அந்தக் கிராமத்து அக்ரஹாரத்திலுள்ள சில குடும்பங்களின் சோகக் கதைகளை மிக உருக்கமாக இதில் வெளியிடுகிறார் ஆசிரியை. கசப்பான உண்மைகளை இவர் எந்த இடத்திலும் பூசி மெழுகவில்லை. அதேசமயம் கசப்பான உண்மைகள் என்பதற்காக, இவர் அவற்றைப் பச்சையாகச் சொல்கிறேன் என்று விரசமாக்கவும் இல்லை! கிராமங்கள் இவ்வளவு மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றனவே என்ற ஆசிரியையின் பெருமூச்சு, இந்த நாவல் எங்கும் இழையோடுவதைத்தான் நான் காணுகின்றேன். திருமதி வாஸந்தி, இனிய எளிய மொழிநடையில் எழுதுகிறார். பாத்திரப் படைப்புக்களை அவர்கள் சொற்கள் வாயிலாகவும் செயல்கள் வாயிலாகவும் பளிச்சென்று துலக்கிக் காட்டுகிறார். கதைப் பின்னலில் செயற்கைத் தன்மையில்லை. எல்லாம் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளே! வெளிப்படையாக அவர் எங்கும் ஓங்கிய குரல் எழுப்பவில்லையென்றாலும், இந்தக் கதையின் வாயிலாக அவர், வாயில்லாப் பூச்சிகளான கிராமத்துப் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் போராடும் துடிப்புக் கொண்டவர் என்பதை நிரூபிக்கிறார். - அகிலன்