book

அமெரிக்கப் பயணம்

₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவ. சண்முகசுந்தரம்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :159
பதிப்பு :1
Published on :2005
Add to Cart

நமது நாடு, மொழி, கலை, பண்பாடு, சிற்பம் இலக்கியம் முதலியன சிறந்தன. தொல் பழமையும் பெருமையும் கொண்டன என்று நாம் பேசிப் பெருமிதம் அடைவது இயல்பு. உலக நாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் மக்கள் அங்கு  ஓங்கி நிற்கின்ற பாங்கையும், அவர்களுக்கே அமைந்த நாட்டு வளங்களையும், கலைகளையும் வாழ் நிலையையும் கண்டு திரும்பும்போது ஒரு வகையான சோர்வு நம் உள்ளத்தை அலைக்கிறது. வெறும் காடுகளைக் கொண்ட நாடுகளில்கூட, மக்கள் வாழ்கின்ற வளமும், காலடியில் கிடைக்கும் கனிமச் செல்வங்களும் விண்ணைத்தொடும் மாட மாளிகைகளையும் பார்த்தால், நாம் ஒருவேளை நம்மைப்பற்றி வீண் பெருமை கொண்டோமோ என்று மனம் நெருடியபோது இந்நூல் என் கைக்கு வந்தது. இந்த நூல் அந்த எண்ணத்தை வலியுறுத்தியது.