ஈழம் வந்தவர்களும் வென்றவர்களும்
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோதி கணேசன்
பதிப்பகம் :சுவாசம் பதிப்பகம்
Publisher :Swasam Publication
புத்தக வகை :ஈழம்
பக்கங்கள் :355
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395272650
Add to Cartமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் ஆனாலும்,
‘இன்னும் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார்’ என்று யாராவது எங்கேயாவது
சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில், நம்மை
உண்மையின் கரம் பற்றவைத்து, ஈராயிரமாண்டு கால ஈழச் சரித்திரத்திற்குள்
நம்மை அழைத்துச்செல்கிறார், இந்நூலின் ஆசிரியர் ஜோதி கணேசன். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட இலங்கையில் பரவி இருந்த இனக்குழுக்களின் தோற்றமும்
வளர்ச்சியும், இலங்கையின் மீதான தமிழக மன்னர்களின் படையெடுப்பு, இலங்கையை
ஆண்ட தமிழ் மன்னர்களின் குறிப்புகள், சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய
இலங்கையின் அரசியல் எனத் தகவல்கள் இப்புத்தகமெங்கும் கொட்டிக்
கிடக்கின்றன.தமிழர்-சிங்களர் என்ற இனப்பாகுபாட்டின் துவக்கம், தமிழர்கள்
மீதான இனவெறுப்புச் செயல்கள், தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களும் அதன்
பலன்களும், தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்,
தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாடுகள், ராஜிவின் அமைதிப்படையை புலிகள்
எதிர்கொண்ட விதம் என இப்புத்தகம் ஈழப் போராட்டத்தின் சகல அம்சங்களையும்
இந்நூல் அலசி ஆராய்கிறது.ஈழ இறுதிக்கட்டப் போரின்போது பிரபாகரனுக்கும்
அவரது குடும்பத்தாருக்கும் நடந்தது என்ன, முப்பதாண்டுகால ஆயுதப்போராட்டம்
தோல்வியைத் தழுவியது ஏன், உட்கட்சி அரசியலையும் வெளிநாட்டு அரசியலையும்
ஒருசேர பிரபாகரன் எப்படி எதிர்கொண்டார் என பிரபாகரனின் வாழ்வையும்
ஈழப்போராட்டத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைந்து பயணிக்கும் புத்தகம்
இது. ஜோதி கணேசன் - அரசியல் விமர்சகர்.