கேரளாந்தகன் ஆதித்த கரிகாலன் (பாகம் 3)
₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr. இன்ப பிரபஞ்சன்
பதிப்பகம் :ஏலே பதிப்பகம்
Publisher :Aelay Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :372
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788196002688
Add to Cartநீண்ட காலமாக தமிழக வரலற்றில் ஆதித்த கரிகாலன் வாழ்க்கை ஒரு
மர்மமாகவே இருக்கிறது. ஆதித்த கரிகாலன் யார் அவரின் வாழ்கையில்
என்னவெல்லாம் நடந்தது என்பதை ஒரு புத்தகமாக மூன்று பாகமாக எழுதியுள்ளேன்.
இதற்கு முழு முதல் காரணமாக அமைந்தது கல்கியின் பொன்னியின் செல்வன்.
இன்றளவும் கல்கி விட்டு சென்ற பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. அப்படி
பொன்னியின் செல்வன் படித்து விடை கிடைக்கா கேள்விகளுக்கு விடை இந்த
மூன்றாம் பாகத்தில் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும். ஆதித்த கரிகாலன்
என்றும் ஒரு கேள்வியாக இருக்கிறார். அவரை விடையாக இந்த புத்தகம் மாற்றும்
என்று நம்புகிறேன். மேலும் இதில் வரும் கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும்
உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். மூன்று
வருடங்களாக எனது மனதில் இருந்த கரிகாலன் உருவம் பெற்று உங்கள் கையில்
வந்துவிட்டார். அதை முழுவதும் உங்களிடம் கொடுத்துவிட்டு ஒரு குழந்தை
விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் தந்தை போல ஓரமாக நிற்கலாம் என்று
நினைக்கிறேன். ஆதித்த கரிகாலன் தொடங்கட்டும், சோழ தேசம் மீண்டும் உங்களை
அன்போடு வரவேற்கிறது