book

சடங்குகளின் கதை இந்து மதம் எங்கே போகிறது? பாகம் 2

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :5
Published on :2016
ISBN :9788190435857
Out of Stock
Add to Alert List

மாங்கல்யம் தந்துநாநேந மமஜீவந ஹேதுநா''....
டி.வி.சினிமா,ரேடியோ, என கல்யாணம் என்றாலே இந்த சுலோகம்தான் ஒலிக்கிறது.
வேத காலத்திலோ, வேத மந்திரத்திலோ தாலி என்ற சடங்கு இல்லை!
தாலி கட்டுவதற்கென்று வேதத்தில் மந்திரமே இல்லை! குறிப்பிடப்படவே இல்லை.
இது ஒரு மங்கள சூத்ரம்தான்.
நான் ஜீவித்து இருப்பதற்கு ஏதுவாக இதை உன் கழுத்தில் கட்டுகிறேன்... ஸௌபாக்கியவதியாக.. நீ நூறு வருடங்கள் சுகமாய் வாழ்ந்திருப்பாயாக - இதுதான் அர்த்தம்.
மணமேடையில் குமாரனும்,குமரியும் அமர்ந்திருக்க எதிரில் புகை கக்கும் ஹோமகுண்டம்.
மாப்ளை கண்ணும் பெண் கண்ணும் கலங்க, கல்யாணம் நடத்தி வைக்கும் வாத்தியார் கண்ணும் கலங்க....மண்டபம் எல்லாம் கண்ணீர்தான். சின்னப்பிள்ளைகள் பாவம்..ஓ வென அழ ஆரம்பித்து விட்டன.
ஏன் அக்ன?
கல்யாணத்தில் ஏன் கண்ணில் புகைஅள்ளி கொட்டுகிறார்கள்.
வாழ்க்கை என்னும் ரயில் வண்டி புறப்படும் போதே இவ்வளவு புகையா? தண்டவாளமே காணாமல் போகும் அளவுக்கு கண்ணை மறைக்கும் புகையை கிளப்பும் இந்த அக்னி தேவையா? ஆதி காலத்தில் திருமணத்தில் நெருப்பில்லை...