சட்டம் A to Z
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வழக்கறிஞர் த. இராமலிங்கம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :215
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789394265622
Out of StockAdd to Alert List
சட்டங்கள் பற்றி இன்னும் வெகு மக்களிடம் புரிந்துணர்வு இல்லை. நடைமுறையில்
உள்ள அடிப்படைச் சட்டங்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது
கட்டாயம். சொத்து வாங்குதல், சொத்து பெயர் மாற்றம் என எது செய்தாலும் அது
சட்டப்படி பதிவு செய்துவிட்டால் பின்னாட்களில் எந்தப் பிரச்னையும் எழாது.
அதற்கு நாம் நடைமுறைச் சட்டங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டியது
அவசியம்.சட்டம் ஓர் இருட்டறையாக இல்லாமல் அனைவருக் கும் அதுபற்றி
தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சாமானியர்கள் முதல் படித்தவர்கள்
வரை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சட்டங்கள் பற்றி கூறுகிறது இந்த நூல்.
வங்கிக் கடன், மூத்த குடிமக்கள் நலன், தத்து எடுத்தலில் சட்டம் கூறும்
நிபந்தனைகள், உயில் எழுதுதல், சொத்து வாங்குதல் என பல நடைமுறைச் சட்டங்கள்
பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.மேலும், அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய
முக்கிய வழக்குகளும் அவற்றின் மீது நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளைப்
பற்றியும் கூறப்பட்டுள்ளது. சமூகத்தில் நாம் எது செய்தாலும் அதை சட்டப்
பாதுகாப்புடன் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்கிறது இந்த நூல்.