கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்
₹390+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெர்னார்ட் சந்திரா, மாயா ஆஞ்சலு
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788119034567
Add to Cartஅடிமைத்தளை தீவிரமாக வேரூன்றியிருந்த அமெரிக்கத் தெற்கு மாநிலங்களில் கறுப்பின மக்களது அப்போதைய வாழ்நிலையின் அவலங்களையும் வேதனைகளையும் இந்தத் தன்வரலாற்று நூலில் கவிஞர் மாயா ஆஞ்சலு விரிவாகக் கூறுகிறார். பல்வேறு நெருக்கடிகளோடு போராடும் நிலையிலும் மனஉறுதியால் தன்னை நிலைநாட்டிக்கொள்ள விழையும் கவித்துவ மனதின் குரலே இந்த நூல்.
வன்மமில்லாத வேதனை வெளிப்பாடுகள், கழிவிரக்கமற்ற துயரப் பதிவுகள், நிராசை நிலையிலும் தோன்றும் நம்பிக்கைக் கீற்றுகள் என மாயா தனது மனவோட்டங்களை உயிரோட்டத்துடன் பகிர்ந்துகொள்கிறார். பாட்டி, தாய், சகோதரன் ஆகிய பாத்திரங்கள் வாசகர் மனங்களில் அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்துவது மாயா ஆஞ்சலுவின் படைப்பாற்றலுக்குச் சான்றாக விளங்குகிறது