book

வீட்டுக் கணக்கு

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோம வள்ளியப்பன்
பதிப்பகம் :எழுத்து
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
Out of Stock
Add to Alert List

வருமானத்தை அதிகரிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்பதையும், வீட்டுச்செலவை குறைக்கும் பல்வேறு செயல்படுத்தக்கூடிய பிராக்டிகல் வழிகளையும் எளிமையாக விளக்குகிற 20-க்கும் மேற்பட்ட நிதி தொடர்பான புத்தகங்களின் ஆசிரியர், சோம வள்ளியப்பன். கார்ப்பரேட் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு நிதி மேலாண்மை அணுகுமுறைகளை வீட்டு பட்ஜெட் போடுவதிலும் செலவை குறைப்பதிலும் எப்படி பயன்படுத்தலாம் என்பதை எளிய எடுத்துக்காட்டுகளுடன் அழகாக விளக்குகிறார். பாருங்கள் ஆனால் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற நோஷனல் பர்ச்சேஸ்; பிரச்னைகளில் மாட்டிவிடும் ரொட்டீன் மற்றும் இம்பெல்சிவ் பர்ச்சேஸ்: தேவையில்லாதவற்றை வாங்கத் தூண்டும் பர்சப்ஷன் என்ற கோளாறு; வழக்கம் போல என்று வாங்காமல், வாங்க வேண்டிய பொருட்களை ஸீரோ பேஸ்ட் ஆக பார்ப்பதால் கிடைக்கும் அனுகூலம்; பிரயாரைஸ்டேஷன்; வீட்டுச் செலவுகளின் செய்யக்கூடிய ப்ரொடக்டிவிட்டி மற்றும் காஸ்ட் பெனிஃபிட் அலசல்; எதையும் தேவையா என்று கேள்வி கேட்கும் சேலஞ்ச் தி ஸ்டேட்டஸ் கோ; கவனித்து உறுதி செய்ய வேண்டிய லாங் டர்ம் பெனிஃபிட்ஸ் என்று - வீட்டு பட்ஜெட் போடுவதை மிகப் புதிய முறையில் சுவாரஸ்யமாக விளக்குகிறார் 80 புத்தகங்களின் ஆசிரியரும், ஒன்றரை லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்ற அள்ள அள்ளப் பணம் புத்தகத்தின் புத்தகத்தை எழுதியவருமான, மேனேஜ்மென்ட் குரு சோம வள்ளியப்பன்.