book

பாரதி புது யுகத்தை அடையாளம் கண்ட மகாகவி

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. மார்க்ஸ்
பதிப்பகம் :எழுத்து
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
Out of Stock
Add to Alert List

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” - என்று சொன்னவர் பாரதி. அப்படிச் சொல்ல எல்லாத் தகுதிகளும் பெற்றவர் அவர். ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி - என முதலில் அடையாளம் கண்ட உலகப் பொதுமகன் அவர். பாரதி வாழ்ந்த காலத்தில் திருக் குர் ஆன் உள்ளிட்ட நூல்கள் எதுவும் முழுமையாகத் தமிழில் வரவில்லை. வந்திருந்த சில நூல்கள், மற்றும் ஆங்கில நூல்களைக் கொண்டுதான் பாரதி இஸ்லாம் குறித்து எழுதியமைக்கு இணை ஏதும் இல்லை. தமிழையும், திருக்குரானையும் பாரதி எத்துணை அழகாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு அவர் பயன்படுத்திய ஒரு அழகிய சொல்லாக்கம்தான் ஈசனைத் தவிர வேறு ஈசன் இல்லை! சிறுபான்மை மக்களின் தனித்துவங்களை ஏற்று மதித்தவர் அவர். எட்டையபுரத்திலே, தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியாருக்கு முக்கிய மண்டபம் அமைத்து, சீரிய முறையில் விழா நடத்தினர்.பரங்கியாட்சியை ஒழித்தாக வேண்டுமென்ற ஆர்வத்தீ கொழுந்து விட்டெரியும் உள்ளத்துடன், வாழ்ந்தவர் பாரதியார். தாயகத்தில் உலவ துரைத்தனத்தார் தடை விதித்ததால், புதுவையில் தங்கிப் புதுப்பாதை வகுத்தார் பாரதியார்- இது பாரதியை அடையாளம் கண்ட அறிஞர் அண்ணா. “உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும்... என்பது மகாகவி பாரதி வாக்கு. தெய்வம் உண்டோ இல்லையோ... ஆனால் உயிர்களிடம் அன்பு கொள்வதே தெய்வ உண்மைகளை அறிவதற்கான ஒரே வழி என்று அவர் சொன்னதாகவே நான் இதைப் புரிந்துகொள்கிறேன். நாய், பூனை, கொசு, யானை, பாம்பு எல்லா உயிர்களிடமும் அன்பு கொள்வது என்பதுதான். “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று முழங்கிய இந்த மகாகவிக்கு என் ஒரு சிறிய காணிக்கை இது.