book

நாவல் எழுதும் கலை

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். அபிலாஷ்
பதிப்பகம் :எழுத்து
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
Out of Stock
Add to Alert List

நாவல் எழுதுவது கிட்டத்தட்ட கடவுளின் பணிக்கு இணையானது. யார் நுழைந்தாலும் தொலைந்து போகிறபடி அமைந்த குழப்பமானதொரு ஊருக்குள் செல்வதைப் போன்றது ஒரு நாவலுக்குள் தொலைந்து போவது. அதற்குள் தொலைந்துபோக வாசகர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் நாவலாசிரியர் அதற்குள் தொலைந்துவிடலாகாது. இதற்கு யாரிடமும் இல்லாத ஒரு வரைபடம் அவரிடம் மட்டும் இருக்க வேண்டும். அதை இந்நாவல் தர முயல்கிறது. நாவல் எழுதுவது மிகமிக சுலபம். உங்களுடைய அன்றாட வாழ்க்கையின் தருணங்களை நாவலாக்கும் நோக்கில் எழுதும்போது. ஆனால் நாவலுக்குள் நீங்கள் ஒரு கதை, கதைக்களம், கதாபாத்திரங்கள், அவர்களுடைய உலகம், செயல்பாடுகள், அதனால் ஏற்படும் விளைவுகள், எண்ண ஓட்டங்கள், மொழி என முற்றிலும் மற்றொரு சிக்கலான அந்நியமான உலகத்தையும் சிருஷ்டிக்க வேண்டும். இந்த இரண்டும் - அகமும் புறமும் இணையும்போதே - அது ஒரு நல்ல நாவலாகிறது. அதை செய்வது மிகமிக கடினம். அதை இந்நாவல் கற்றுத் தருகிறது. நீங்கள் உங்கள் முதல் நாவலை எழுதிப் பார்ப்பவரா, எழுதிப் பார்த்து தோற்றவரா, நாவலின் கலை நுணுக்கங்களை வாசித்தறிய விரும்பும் பொது வாசகரா உங்களுக்கான புத்தகம் இது.