book

கிரீஷ் கர்னாட், எம். எஸ். மூர்த்தி நாடகங்கள்

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. நல்லதம்பி
பதிப்பகம் :எழுத்து
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
Out of Stock
Add to Alert List

தொன்மத்தையும் சரித்திரத்தையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தற்கால சமூக வாழ்வின் சிக்கல்களை நமது சிந்தனைக்கு உட்படுத்தும் நாடகக் கலைஞன் கிரீஷ் கர்னாட். ஹயவதனன் அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. இது வாழ்வின் முழுமையை நோக்கிய தேடலையும் அடையாளங்களுக்கான தேர்வுகளையும் முன் வைக்கிறது. அமைதியும் இன்பமும் பொருந்திய இல்வாழ்க்கையின் மீதான விருப்பம் என்பது ஒருமுனை. அதே சமயத்தில் எளிய அடையாளங்களைக் கடந்த சமூக அடையாளத்தை அடைவதற்கான கனவு என்பது மறுமுனை. இன்பத்தில் திளைப்பவர்கள் அடையாளத்தை நோக்கி எழுவதில்லை. அடையாளத்தை நோக்கி எழுபவர்கள் இன்பத்தில் மூழ்கியிருக்க வாய்ப்புகள் அமைவதில்லை. ஒன்றைத் துறந்தே இன்னொன்றை அடையமுடியும். இருளில் தெரியும் விண்மீன்களாக இந்த இருமுனைகளை யசோதரையிலும் சித்தார்த்தனிலும் நம்மைப் பார்க்க வைக்கிறார் மூர்த்தி. அதன் வழியாக நம்மிடம் செயல்படும் இருமுனைகளையும் பரிசீலிக்கவைக்கிறார்.