கண்ணாடி விநாடிகள்
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :173
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789390771615
Add to Cartஇவை 1969 முதல் 2023 வரை – பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த முன்னணி மாத, வார, தின பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகள்.
கம்ப்யூட்டருக்கு முன்பாய் உட்கார்ந்து ஒரு கஸ்டமரோடு சார்டிங்கில் ஈடுபட்டிருந்த செந்தில் தன்னுடைய மனைவி சுபமதி, அறைக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு என்ன என்பதுபோல் புருவங்களை உயர்த்தினான்.
சுபமதி அவனை நெருங்கி குரலைத் தாழ்த்தினாள்.
'' நம்ம தெருவில் இருக்கிற கைலாஷ் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்... இந்த கொரோனா காலத்துல மனுஷன் எதுக்கு வந்திருக்கார்ன்னு தெரியலை. சிட் அவுட்ல சேர் போட்டு உட்கார வெச்சுட்டு வந்தேன்''
'' விஷயம் என்னன்னு கேட்டியா...?''
'' நான் எப்படிங்க கேட்க முடியும்...? நீங்களே போய் என்னன்னு கேளுங்க.''
செந்தில் சார்டிங்கில் இருந்த கஸ்டமர்க்கு பிறகு பேசுவதாக செய்தி அனுப்பிவிட்டு நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழுந்தான். மனதுக்குள் கேள்விகள் முளைத்தன.
'கைலாஷ் எதற்காக வந்திருப்பார்?'