எதிர்பாராத முத்தம்
Ethirparatha Mutham
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவேந்தர் பாரதிதாசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788190678063
Out of StockAdd to Alert List
உலகம் விளக்கம் உறக், கீழ்த் திசையில்
மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை!
வள்ளுயூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப்
புள்ளிமான வெளியிற் புறப்பட்ட துவாம்!
நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்,
கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்,
செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்,
அப்படி யிப்படி வலதுகை யசைத்தும்
புறப்பட்ட மங்கைதான், பூங்கொடி என்பவள்
நிறப்பட்டாடை நெகிழ்ந்து காற்றில்!
பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்
சீதளம் சிந்திற்றாம்! செல்விதழ் மின்னிற்றாம்.
பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில்,
வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு
வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள்;
புனிதை அவள் பெயர். புனல்மொள்ளு தற்கும்
குளிப்ப தற்கும் சென்றார்
குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே!
மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை!
வள்ளுயூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப்
புள்ளிமான வெளியிற் புறப்பட்ட துவாம்!
நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்,
கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்,
செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்,
அப்படி யிப்படி வலதுகை யசைத்தும்
புறப்பட்ட மங்கைதான், பூங்கொடி என்பவள்
நிறப்பட்டாடை நெகிழ்ந்து காற்றில்!
பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்
சீதளம் சிந்திற்றாம்! செல்விதழ் மின்னிற்றாம்.
பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில்,
வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு
வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள்;
புனிதை அவள் பெயர். புனல்மொள்ளு தற்கும்
குளிப்ப தற்கும் சென்றார்
குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே!