book

தமிழ்க் காதல்

Thamizhk Kadhal

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ. சுப. மாணிக்கனார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :399
பதிப்பு :5
Published on :2007
ISBN :9789380217345
Add to Cart

காதல், திருமணத்தில் முடியாவிட்டால் சிறப்பில்லை. ஆதலால், தமிழ்ச் சான்றோர் திருமணத்தை வலியுறுத்தினர். தோழி களவொழுக்கத்தில் பேரிடம் பெற்றிருப்பதற்கும் 882 களவுப் பாக்களில் பாதிக்கு மேல் வரைவுத் துறைகளாய் இருப்பதற்கும் திருமணக் கொள்கையே ஏதுவாகும் (65). அறத்தொடு நிற்றல் என்பதில் 'அறம்' என்பது கற்பைக் குறிக்கும். கற்பென்னும் கடைப்பிடியில் நின்று களவொழுக்கத்தையும் பெற்றோர்க்கு வெளிப்படுத்தல் என்பது இத்துறையின் பொருள். தலைவி முன்னரே கற்பு நெறிப்பட்டு விட்டாள் என்பதனை முதன்மையாக வலியுறுத்துவதே தோழியின் நோக்கம். இற்செறிப்பு, ஊர் அலர், வெறியாட்டு, நொதுமலர் வரைவு என்ற இன்னாச் சூழ்நிலைகளைக் கடத்தற்கு இரண்டு வழிகள் உள. ஒன்று, அறத்தொடு நிற்றல், ஏனையது உடன்போக்கு, இவற்றுச் ஒன்று நிகழின் மற்றொன்று நிகழாது. இங்ஙனம் பல அரிய செய்திகளை இந்நூல் அறிவிக்கும்.