book

அட்டாங்க யோகம்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஆர். தாமஸ்
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Kurinchi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :138
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

மனிதன் தான் செய்யும் எல்லாச் செயல்களும் தனக்கு இன்பம் விளைவிப்பதாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனேயே செய்கிறான். அதாவது நமது உயர்ந்த இலட்சியம் இன்பம் பெறுவது ஒன்றே. இந்த இன்பம் முடிவு இல்லாததும், தடைப்படாததுமான பேரின்பமாக இருக்க வேண்டும். இந்த இன்பம் எங்கிருந்து கிடைக்கும் ? இது நமக்குள்ளே, அதாவது நம் ஆத்மாவில்தான் கிடைக்கும். இதை அடையும் வழி என்ன என்று யோசிக்க வேண்டும். இந்த யோசிக்கும் திறன் மனிதப் பிறவியிடம் மட்டுமே உள்ளது. இதனை உணர்ந்த நம் முன்னோர்கள் பலவாறு யோசித்து, தவம் இயற்றி, இறைவனின் அருளைப் பெற்று பல்வேறு வழிகளைக் கண்டறிந்தனர்.