book

கூந்தல் வளர்ச்சிக்கு எளிய மருத்துவம்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.மீ. பழனியப்பா
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

கருகருவென கூந்தல் வளர வேண்டும், முடிக் கால்கள் உறுதி பெற வேண்டும், இளநரை நீங்க வேண்டும், பூச்சிவெட்டு, சொட்டை நீங்கிச் செழித்து அடர்த்தியுடன் கூந்தல் வளர வேண்டும்.
இதற்காகப் பெண்கள் மனக்கவலைப்படுவது தேவையற்றது. கவலை ஏற்பட்டாலே முடி நரைக்கும், உதிரும் என்பதைப் பிசிராந்தையாரே கூறியிருக்கிறார். தனக்குக் கவலை ஏதும் இல்லாததால்தான் முடி நரைக்கவும் இல்லை, உதிரவும் இல்லை என்கிறார்.
மேலும் முடி உதிர்வதைத் தடுக்கப் பலவிதமான தைலங்களையும், மருந்துப் பொருட்களையும் உபயோகித்து அதன்மூலம் எந்தவிதப் பலனும், பயனும் கிடைக்காமல் மனவருந்தும் பெண்கள் பலர் உள்ளனர்.
இதற்கு நல்ல பலனும், பயனும் தருவது எளிய சித்த மருத்துவ முறைப்படி செய்த மாத்திரைகளும், தைலங்களும் மிகச்சிறந்த பயனும் பலனும் தருகிறது.
அத்தகைய கூந்தல் தைலங்களும், மருந்துகளுமே நல்ல பலன் தருகிறது என்றால், அது சித்த மருத்துவப் பொருட்களே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெரிகிறது.
இத்தகு பெருமை வாய்ந்த 'பெண்கள் கூந்தல் வளர்ச்சிக்கு எளிய மருத்துவம்' என்ற நூலில் கூந்தல் வளர்ச்சிக்கான சகல விபரங்களும் கூறப்பட்டுள்ளது.