வியாபாரம், தொழில் சிறக்க சிறந்த மந்திரங்கள்
₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆபஸ்தம்பன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2010
Add to Cart“ஆத்தாளை எங்கள் அபிராம
வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்
தாளைப் புவி அடங்கக்
காத்தாளை ஐங்கரணை பாசாங்
குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு
வார்க்(கு) ஒரு தீங்கில்லையே”
இந்த உலகங்கள் அனைத்தையும் படைத்துக் காப்பவனான அன்னை அபிராமி இந்த உலகத்தின் தாயாக விளங்குகிறாள்.
மாதுளம்பூ போன்ற நிறத்தைக் கொண்டவள் அவள். தன்னுடைய திருக்கரங்களிலே மலர் அம்புகளையும், அங்குசத்தையும், பாசத்தையும், கரும்பு வில்லையும் கொண்டு திகழ்பவள்.
மூன்று கண்களுடன் விளங்கும் ஒப்பற்ற தாயானவள் அவள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அம்பிகையை வணங்குபவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னையின் அருளால் வியாபாரம், தொழில் போன்றவை சிறப்படைவதற்குரிய மந்திரங்களைப் பார்ப்போம். அபிராமிபட்டர் அவர்களால் இயற்றப்பட்ட அபூர்வ மந்திரங்கள் இவை.